Sunday, October 17, 2010

தமிழகத்திற்கு குவியும் பாராட்டுகள்!

''கல்வி, மின்சாரம் போன்றவற்றில் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டியவை ஆகும்''

                                                                                    - குடியரசுத் தலைவர்

''அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும், திட்டங்கள் போன்ற பெரும் பணிகளிலும் ஊழல் வெகுவாகக் குறைந்து, திறமை அதிகமாகக் காணப்படும் ஒரே மாநிலம் தமிழகமே!'

                                                                                   - பிரதமர்

''விவசாயிகளுக்கு கடன் வழங்குவதிலும், கூட்டுறவுத் துறை வளர்ச்சியிலும் முன்னணியில் இருப்பது தமிழகமே!'

                                                                                  - மத்திய அமைச்சர்



''முற்போக்கு அரசியலிலும், நிலையான ஆட்சியிலும், நிர்வாகத் திறமையிலும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது'
   
                                                                  - மத்திய உணவு அமைச்சர்


''சிகப்பு நாடா என்ற தாமதத் தன்மை என்னும் தீராத நோயைத் தீர்த்துக் கட்ட முழுமூச்சுடன் முயன்று முன்னேறி வருகிறது தமிழகம். அதை பிற மாநிலங்களும் அவசியம் பின்பற்ற வேண்டும்''

                                                                                - தேசியத் தலைவர்


''உணவு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டது. இது என்றுமில்லாத சாதனை.'

                                                                               - மத்திய அமைச்சர்


''சமுதாய நலத்திட்டங்களுக்கான மத்திய அரசின் மானியங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான்''
                                                          
                                                                 - மத்திய திட்டக்குழு தலைவர்


என்ன? படிக்க படிக்க ''கண்ண கட்டுதா'' உங்களுக்கு? அவ்வளவு நல்ல ஆட்சியா நடக்குது இங்கே? என்று கேட்க தோணுகிறதா?


இந்தப் பாராட்டுக்களெல்லாம் மக்கள் தலைவர் காமராசர் தமிழக முதல்வராய் இருந்த போது திரு. ராஜேந்திர பிரசாத், பண்டித நேரு, மொரார்ஜி தேசாய், ஏ.எம்.தாமஸ், பண்டித பந்த், எம்.வி.கிருஷ்ணப்பா, குல்சாரிலால் நந்தா போன்ற தலைவர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்கள்.

என்னை மிகவும் கவர்ந்த பெரும் தலைவர் காமராசரைப் பற்றிய பதிவுடன் எனது தளத்தைத் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதே சமயம் சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு சிறப்பான ஆட்சியுடன் துவங்கிய நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பதை என்னும் போது வேதனை தான் மிஞ்சுகிறது.

அண்மையில் காமராசரைப் பற்றிய ஒரு புத்தகத்தை நூலகத்தில் படித்தேன் (மக்கள் தலைவர் காமராசர், தொகுப்பு - சுந்திர புத்தன், வெளியீடு - தோழைமை வெளியீடு) அதில் கிடைத்த தகவல்கள் தான் மேலே சொன்னவை. எனது நெருங்கிய நண்பன் அடிக்கடி கூறுவான் ''காமராசரைப் பற்றியெல்லாம் வருங்கால சந்ததியினருக்கு தெரியாமலே போய் விடுமோ?'' தலைவரைப் பற்றி ஒரு சிலருக்காவது தெரியப்படுத்தும் முயற்சியை நான் தொடர்ந்து செய்வேன்.

பெரியாரும், காமராசரும் கனவில் வருகிறார்கள், காமராசரின் ஆட்சி தான் இங்கே நடக்கிறது, காமராசரின் ஆட்சி சிறந்த ஆட்சி என்றெல்லாம் இன்று கூறிக் கொள்ளும் திரு. கருணாநிதி, தானும் தன்னுடைய கட்சியும் காமராசருக்கு எதிராக அன்று செய்த அநாகரீகமான அவதூறு விமர்சனங்களுக்கெல்லாம் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா? தமிழக அரசியலின் மூத்த தலைவரிடம் இருந்து இந்த குறைந்தபட்ச அரசியல் நாகரீகத்தை, நேர்மையை எதிர்பார்க்கலாமா?

8 comments:

  1. Good start Kanna!!! Please find time to blog frequently.

    ReplyDelete
  2. Nice one Machan..Its true that nobody will remember/know kamarajar...As a fact even though I have heard of his name lot many times, I do not know what exactly he did!!!

    ReplyDelete
  3. Varavetkathakka thodakkam..Kannan sir,syabas!
    Kavinyar ennangalil intha unarvugal pathikapada vhendum...

    ReplyDelete
  4. வழ்த்துக்கள்!!!


    கருணாநிதி மன்னிப்பு கெக்கமாட்டார்!!!, அவர் ஒரு சுயநலவாதி.

    ReplyDelete
  5. Hi Kannan,

    When I started reading, I was bit taken a back, assuming that these comments were about KK's aatchi!

    Ada namma Kalanigar aatchi pathi ivlo nalla pera? nammakku theriyamae poche nnu nenachen.

    The following section broke the suspense and also proved how poor I'm in history :)

    Kalalakkalana start Kannan and your blog is straight going to my favorite list.

    Regards,

    Hari

    ReplyDelete
  6. Hi Kannan!

    Vazhga Valamudan!

    Good start with Former CM, Kamarajar.

    Thanks and regards
    Krishnamoorthi

    ReplyDelete
  7. கட்டுரையைப் படித்து, என்னைப் பாராட்டி ஊக்கமூட்டும் கருத்துக்களைப் பதிவு செய்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete